கார்சீனியா இண்டிகா (Thouars) Choisy - குளுசியேசி

இணையான பெயர் : பிரிண்டோனியா இண்டிகா Thouars

தமிழ் பெயர் : முற்கல்.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது, முதிரும் போது பிளவுகளுடையது; உள்பட்டை சிவப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் தரை மட்டத்திற்கு இணையானது; சிறிய நுனிக்கிளைகள் எதிரடுக்கமானவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கோணங்கள் கொண்டவை, உரோமங்களற்றது.
சாறு : சாறு மஞ்சள் நிறமானது, அதிகளவில் உண்டாகின்றன.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.7-1.5 செ.மீ. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது, தளத்தில் சிறிது உறை போன்றது; இலை அலகு 6-12 X 1.5-4.3 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவம் முதல் குறுகிய தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி மழுங்கியது அல்லது கூரியது முதல் சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு சிறிது அலைப்போன்றது (ரெப்பண்ட்), சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-7 ஜோடிகள், அதிக நரம்புகள் இரண்டாம் நிலை நரம்புகளுகிடையே காணப்படுபவை; மூன்றாம் நிலை நரம்புகள் அற்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை, ஆண்மலர்கள் இலைக்கோணங்களிலும் மற்றும் கிளையின் நுனியில் காணப்படுபவை; பெண்மலர்கள் தனித்தவை, தண்டின் நுனியில் அல்லது இலைக்கோணங்களில் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி),கோளவடிவானது, வழுவழுப்பானது; அதிக விதையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, திரிந்த பசுமைமாறாக்காடுகளிலும் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளிலும், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - பரவலாக மத்திய சயாத்திரியின் வடக்கு பகுதியிலும் மற்றும் தென்கொங்கன் பகுதி வரை காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Candolle, Prodr. 1: 561. 1824; Gamble, Fl. Madras 1: 73. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 41. 2004; Saldanha, Fl. Karnataka 1: 206. 1996; Cook, Fl. Bombay 1: 73. 1902.

Top of the Page