ஹோமாலியா சிலானிக்கா (Gardner) Benth. - ஃப்ளக்கோர்சியேசி

இணையான பெயர் : பளாக்வல்லியா சிலானிக்கா Gard.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : பட்டை வழவழப்பானது, பழுப்பு நிறம்; உள்பட்டை வெள்ளை- ஆரஞ்சு புள்ளிகள் போன்றது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம்; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.5– 1.3 செ.மீ. நீளமானது, பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 7.5-13 X 3.6-7.6 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது வட்டமானது முதல் சப்அட்டனுவேட், அலகின்விளிம்பு பிறை வடிவ ரம்ப பற்களுடையது, சார்ட்டேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6 - 8 ஜோடிகள், சீராக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் - பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி நீளமானது, மெல்லிய ஸ்பைக், மலர்கள் சிறியவை, பச்சை – வெள்ளை நிறமானவை, சிலசமயங்களில் க்ரிம்சன் சிவப்பு நிறமானவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சியுல்), விதைகள் எண்ணற்றவை, நீள்சதுர வடிவானது அல்லது கோணங்களுடையது.

வாழியல்வு :

சப்கேனோபி மரமாக 900 மீ. வரை உள்ள மலைகளில் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் –ஆங்காங்கே தெற்கு மற்றும் மத்திய சாகாயத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Linn. Soc. Bot. 4. 35.1860; Gamble, Fl. Madras 1: 522. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 32. 2004; Saldanha, Fl. Karnataka 1: 270. 1996.

Top of the Page