மகோனிய லெஸ்நால்டி (Wall. ex Wt. & Arn.) Takeda ex Gamble - பெர்பெரிடோயேசி

இணையான பெயர் : பெர்பெரிஸ் நேப்பளன்சிஸ் Spreng var. லெஸ்நால்டி J. Hk. & Thoms. பெர்பெரிஸ் லெஸ்நால்டி Wall. ex Wt. & Arn.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : குறுஞ்செடி அல்லது சிறிய மரம், 6 மீ. வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கார்க் போன்றது, வெளிறிய சாம்பல் நிறமானது, நீள்வாக்கில் பிளவுகளுடையது; உள்பட்டை மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை, 48 X 13 செ.மீ. நீளமானது, பல்வினேட்; கூட்டிலையின் மத்தியகாம்பு (ராக்கிஸ்) கோணங்களுடையது; ஒர் கூட்டிலையில் சிற்றிலைகள் 5-25 ஜோடிகளுடன் நுனியில் ஒற்றை இலையுடையது, ஒர் கூட்டிலையின் தளத்திலுள்ளவைவிட நுனியில் காணப்படும் சிற்றிலையின் அலகு பெரியது, சிற்றிலையின் அலகு 3-9 X 2-5 செ.மீ. மற்றும் தளத்திலுள்ள ஜோடியின் அலகு 1 செ.மீ. நீளமானது, காம்பற்றவை, பொதுவாக முட்டை வடிவானது ஆனால் தளத்திலுள்ளவையின் அலகு பல கோணங்களுடையது, அலகின் விளிம்பு மற்றும் அலகின் நுனி கூர்மையான முட்கள் போன்ற பல்லுடையது, அலகின் தளம் இதய வடிவானது (கார்டேட்), கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, கீழ்பரப்பு வெளிறிய நிறமுடையது, தளத்திலே 5-7 நரம்புகளுடையது
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படுவது, நிமிர்ந்த ரெசீம், 30 செ.மீ. நீளமானது; மலர்கள் மஞ்சள் நிறமானது, மலர்காம்பு 1 செ.மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, மெழுகு பூசினாற் போன்றது, பர்புள் நிறமானது, 1-3 விதைகளையுடையது.

வாழியல்வு :

தென்இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - நீலகிரி, ஆனைமலை மற்றும் பழனி மலைகள்.

காணப்படும் இடம் :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1600-2400 மீ. வரையான மலைகளில் காணப்படும்.

சான்று ஏடு :

Gamble, Fl. Madras 1: 32. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 24. 2004.

Top of the Page