மெமிசிலான் லாஸ்சோனை Gamble - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மெல்லியது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்காமானவை, குறுக்குமறுக்குமானவை; இலைக்காம்பு 0.4 செ.மீ, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 6-10 X 2-3 செ.மீ., ஈட்டி வடிவானது, அலகின் நுனி நீண்ட அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் சிறிது தெளிவற்றது, ஒன்றுக்கொன்று இணையானவை மற்றும் இண்ட்ராமார்ஜினல் (விளிம்பு நரம்பு) நரம்புடன் இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்கள் அல்லது தண்டின் பக்கவாட்டில் தொகுப்பாக காணப்படுபவை, குறைந்த எண்ணிக்கையில் மலர்கள் கொண்ட தொகுப்பு, காம்பற்றவை; மலர்தண்டு கிண்ணத்திலுள்ள கோடு (ரேய்) தெளிவற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, மஞ்சள் நிறமானது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

சிறிய குத்துசெடிகளாக கீழ்மட்ட அடுக்கில் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 600-900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - ஆங்காங்கே தெற்கு சயாத்திரியில், பாலக்காடு முதல் வயநாடு வரை (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Bull. Misc. Inform. Kew 1919. 226. 1919; Gamble, Fl. Madras 1: 503. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 182. 2004.

Top of the Page