மெமிசிலான் மேக்ராகார்ப்பம் Thw. - மெலாஸ்டோமெட்டேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரங்கள்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது வளையம் போன்றது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.5-0.7 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 14 X 7.5 செ.மீ., அகன்ற நீள்சதுர வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது அல்லது மழுங்கியவை, அலகின் தளம் கூரியது முதல் சிறிது அட்டனுவேட் போன்றது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இலை உதிரும் போது இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் இண்ட்ராமார்ஜினல் (விளிம்பு நரம்பு) நரம்பும் சிறிது கண்களுக்கு புலப்படக்கூடியது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி நெருக்கமானது அல்லது அம்பல் வடிவான சைம் வகை, மஞ்சரி காம்பு 0.4 செ.மீ. நீளமானது, இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்கள் காம்புகளுடையவை, பர்புள் நிறமானது; புல்லி இதழ்கள் ஆழமான பிளவுகளுடையவை மற்றும் சிறகு போன்ற உள்வளரியுடையவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 1.5-2 செ.மீ. குறுக்களவுடையது, கோளவடிவானது, சிறிய நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

அரிதானது, சிறிய குத்துசெடிகளாக கீழ்மட்ட அடுக்கில் (அன்டர்ஸ்டோரி), குறைவான உயரமுடைய மற்றும் அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரமுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆங்காங்கே தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி காடுகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

இந்த சிற்றினம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கான ஓர் புதிய பதிவு. இதற்கு முன்னால் ஸ்ரீலங்காவிலுள்ள மலைகளில் காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டது. (Bremer,1987); அழியும் தருவாயில் உள்ளது (வல்நர்புள்) (ஐ. யு. சி. என், 2000).

சான்று ஏடு :

P. Zeyl. 110. 1859; Bremer in Dassanayake and Fosberg, Fl. Ceylon , 263. 1987.

Top of the Page