செமிகார்பஸ் ஆரிகுலேட்டா Bedd. - அனகார்டியேசி

:

தமிழ் பெயர் : வெள்ளை சேரை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது; உள்பட்டை வெளிறிய அரக்கு (ப்ரவுன்) நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் உரோமங்களுடையது.
சாறு : தண்ணீரை போன்றது, மெதுவாக கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.2-0.7 செ.மீ. நீளமானது, தடிமனானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது, இலை அலகு 8-28 X 2.2-7 செ.மீ., நீளமானது, தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் முனை மழுங்கலானது, அலகின் தளம் செவி வடிவானது, சப்கோரியேசியஸ்; மையநரம்புகள் மேற்புறத்தில் இலையின் பரப்பிற்கு சமமானது அல்லது சிறிது பள்ளமானது; நரம்புகள் மற்றும் வலை போன்ற அமைப்பு ஏற்படுத்தும் மூன்றாம் நிலை நரம்புகள் மேற்பகுதியிலும், கீழ்பரப்பிலும் இலையின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-18 ஜோடிகள், ஒன்றுக்கொன்று இணைக்கோடுகள் போலவும் இலை அலகின் விளிம்பில் மிதமான வளைவுடன் காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் அமைந்த பேனிக்கிள், 7-15 செ.மீ. நீளமானது, மலர்கள் ஒர்பாலானவை.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சமச்சீரற்ற தலைகீழ் முட்டை வடிவம், கருப்பு நிறம், கனி பூத்தண்டு கின்னம் மேல் அமர்ந்திருக்கும், ஒரு விதையுடன் காணப்படும்.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, பரவலாக உயரம் குறைந்த மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரை), அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - அதிகமாக தெற்கு சயாத்திரி மலையிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதியில் (மத்திய சயாத்திரியிலும்) காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

குறைந்த பாதிப்புக்குட்பட்டது: பாதிக்கும் தருவாயில் (த்ரட்டண்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்.., 2000).

சான்று ஏடு :

Fl. Sylv. 2: 232. 1870; Gamble, Fl. Madras 1: 267. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 111. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 126. 1990.

Top of the Page