சொலினோகார்பஸ் இண்டிகா Wt.& Arn. - அனகார்டியேசி

இணையான பெயர் : ஸ்பாண்டியஸ் இண்டிகா (Wt. & Arn.) Airy Shaw & Forman

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய இலையுதிர் மரங்கள், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, சாம்பல் கலந்த பச்சை நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : பக்ககிளைகளின் பட்டை கார்க் போன்று பொரிந்து காணப்படும், உரோமங்களற்றது.
இலைகள் : கூட்டிலைகள்; ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள் (இம்பேரிபின்னேட்), நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) 15-30 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வட்டவடிவானது, வரித்தழும்புகளுடையது, பல்வினேட், உரோமங்களற்றது; சிற்றிலைகள் எதிரடுக்கமானது, 3-7 ஜோடிகள் மற்றும் நுனியில் ஒரு சிற்றிலை மட்டும் இருக்கும், சிற்றிலைக்காம்பு 0.2 செ.மீ. நீளமானது; சிற்றிலை அலகு 3-8 X 1.4-3 செ.மீ., குறுகிய நீள்சதுர சிற்றிலை மற்றும் சிலவற்றில் நீள்சதுரம்-முட்டை வடிவம்;அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு ஆழமற்ற பிறை பற்களுடையது சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு சிறிது இலையின் பரப்பைவிட உயர்ந்தது மற்றும் விளிம்பு நரம்புடையது (இண்ட்ராமார்ஜினல் நரம்பு); இரண்டாம் நிலை நரம்பு 8-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மையநரம்பை நோக்கி படர்ந்திருக்கும் (அட்மீடியல்லி ராமிபைடு).
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள்; மலர்கள் இருபாலானவை, வெள்ளை நிறம், நறுமணமுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்சதுரம், 0.8-0.4 செ.மீ., ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகள் மற்றும் அதிகம் மழை பெறும் இலையுதிர்காடுகளில் உள்ள சிறிய ஓடையின் ஒரங்களில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Prodr. 1: 172. 1834; Gamble, Fl. Madras 1: 262. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 113. 2004; Saldanha, Fl. Karnataka 2: 209. 1996.

Top of the Page